திருப்பூர் : நொய்யலாற்றில் தொடர்ந்து சாயநீர் கலந்து வருவதால் மீண்டும் நுரை பொங்கி வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால், நொய்யல் நதியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நொய்யலாற்றில் வெள்ளம் அதிகரித்து வருவதை சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட சாய ஆலையினர் சுத்திகரிக்கப்படாத சாய கழிவு நீரை மீண்டும் நொய்யலில் திறந்து விட்டுள்ளனர்.

இதன் காரணமாக, ராயபுரம் - பெத்திகுட்டை அணைப்பகுதியில் நுரையானது அதிகளவில் பொங்கி வழிகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சாயநீர் நொய்யலில் கலப்பதை தடுத்து நொய்யல் நதியை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நொய்யலில் இதேபோன்று சாய கழிவு நீரால் நுரை பொங்கி ஓடியது குறிப்பிடத்தக்கது.