கோவையில் காவல் நிலைய எல்லை பிரச்சனை : 7 மணி நேரமாக மரத்தில் தூக்கில் தொங்கியபடி கிடந்த பிணத்தால் பரபரப்பு

கோவை : கோவையில் போலீசாரின் எல்லைப் பிரச்சனை காரணமாக நீலம்பூர் பைபாஸ் சாலை அருகே உள்ள மயானத்தின் மரத்தில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது.

கோவை : கோவையில் போலீசாரின் எல்லைப் பிரச்சனை காரணமாக நீலம்பூர் பைபாஸ் சாலை அருகே உள்ள மயானத்தின் மரத்தில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியது. 



நீலம்பூர் பைபாஸ் சாலையின் அருகே உள்ள குளத்தூர் - இருகூர் சாலையில் உள்ள ஒரு மயானத்தின் வெளிப்புறத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மரத்தில் கயிறு மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மதியம் சுமார் 12 மணியளவில் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அருகே உள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.



இந்த தகவல் அறிந்து வந்த சூலூர் காவல் நிலைய போலீசார், இது எங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல என திரும்பிச் சென்றுவிட்டனர். அதேபோல, சிங்காநல்லூர் போலீசாரும் எங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல என இந்த பிணத்தை எடுக்க மறுத்து விட்டனர். இப்படி மாவட்ட போலீசாரா..? அல்லது மாநகர போலீசாரா..? என்ற எல்லை சிக்கலால் இறந்த உடலானது சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக மரத்தில் தொங்கியபடி இருந்தது.

பின்னர், கிராம நிர்வாக அலுவலர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சுமார் 7 மணி அளவில் காவல்துறையினர் அந்த இறந்த உடலை எடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற காவல் நிலைய எல்லை பிரச்சனைகளால் அடிக்கடி ஏற்படும் சிக்கல்களை காவல்துறையினர் முறைப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...