சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு : மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் சாலைமறியல்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு சங்கர் நகர் பகுதியில் சாக்கடை கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் சாக்கடைக் கழிவுகள் மழை வெள்ளம் போல ஓடி வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, இச்சாலையினை யாரும் கடந்து செல்ல இயலாதவாறு சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. 



கடந்த பல மாதங்களாக இந்தப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், இங்குள்ள குடியிருப்புகளில் சகிக்க இயலாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய்களும் பரவி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடை கழிவு நீர் பாதையை சீர்செய்ய வலியுறுத்தியும் சங்கர்நகர் பகுதி மக்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையோரம் கட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவு வாய்க்காலை தரைப்பகுதியில் இருந்து உயர்திக்கட்டவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 



இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...