மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க., பொதுச்செயலாளர் க அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும். அன்றைய தினம் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மு.க., ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் தி.மு.க., செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. என்றும்
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது என்பதால், இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ராஜா, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், திமுக.,வின் அவசர செயற்குழு பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், "மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தவும், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது," என்றார்.