யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ் : நீலகிரியில் பணிகள் விறுவிறு...

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் 309 அறைகளை கொண்ட 39 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் வளாக கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர்.


நீலகிரி:  நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் 309 அறைகளை கொண்ட 39 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் வளாக கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.



இந்நிலையில், முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதனால் யானைகள் மட்டுமின்றி வன விலங்குகள் நகருக்குள் ஊடுருவி பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கடந்த 2009-ம ஆண்டு யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

சுமார் 10 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை கணக்கெடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. கணக்கெடுக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது யானைகள் வழி தடத்தில் உள்ள 309 அறைகள் கொண்ட 39 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர்.



இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது 27 கட்டிடங்கள் 48 மணி நேரத்திற்குள் காலி செய்யவில்லை எனில், சீல் வைக்கப்படும். மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த நீதிமன்ற உத்தரவு குடியிருப்புகளுக்கு பொருந்தாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை," என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...