ராஜாஜி அரங்க கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.



உடல் நலக்குறைவால் உயிரிழந்த கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த போது, பொதுமக்களுக்காக இரண்டு வழிகளும், முக்கிய பிரமுகர்கள் கருணாநிதியின் உடலை அருகில் காண வசதியாக, அரங்கின் பின்பகுதியில் பிரத்தியேகமாக வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே தடுப்பு வேலிகள், பேரி கார்டுகள், கயிறுகள் என பல்வேறு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை முதல் தொண்டர்களின் கூட்டம் குவியத் தொடங்கியதால், வி.ஐ.பி., வழியில் சென்று கருணாநிதியின் உடலை காணவும் தொண்டர்கள் முண்டியடித்தனர். 

பிரதமர் வந்து சென்ற வரை நிலைமை கட்டுக்குள் இருந்தது. அதன்பின் தொண்டர்கள் முண்டியடித்ததால் அரசியல் கட்சியினர், நடிகர்கள் என முக்கிய பிரமுகர்களும் நெரிசலில் சிக்கினர். வி.ஐ.பி., வழியே உள்ளே சென்றவர்களால் அதே வழியில் வெளியேறவும் முடியாத நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழ்ந்தனர். மேலும், 26 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும்,காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நிதி உதவியும் வழங்கினார். அவருடன் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...