கோவை : வால்பாறையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சோலையார் அணையின் மூன்று மதகுகளிலும் இருந்து இன்று நீர் திறக்கப்பட்டன.
கோவை : வால்பாறையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சோலையார் அணையின் மூன்று மதகுகளிலும் இருந்து இன்று நீர் திறக்கப்பட்டன.
கடந்த ஜுன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையினால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கூழங்கல் ஆறு, பிர்லா பால்ஸ், நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால், வால்பாறையில் இருந்து சோலையார் அணை, நீரரர் ஆணை, சின்னக்கல்லார் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஜுன் மாதத்தின் தொடக்கத்தில் வெறும் 4 அடியாக இருந்த சோலையாறு அணை, கிடுகிடுவென கடந்த பதினைந்து நாட்களிலே அதன் முழுகொள்ளவை எட்டியது. இதனால், சோலையார் அணையில் இருந்து 4 முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால், அணை மீண்டும் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில், அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணையின் மூன்று மதகுகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
வால்பாறையில் 73 மில்லி மிட்டரும், சின்னக்கல்லார் 116 மில்லி மீட்டரும், நீரரர் அணை பகுதியில் 156 மில்லி மீட்டரும், தற்போது சோலையார் அணைக்கு நீர்வரத்து 6,316.20 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிக்கிறது. அணையில் இருந்து நீரின் அளவு 148.50 கன பைபாஸ் அடியாகவும், சேடல் டேம் வழியாக 3,303.13 கன அடியும் திறக்கப்படுகிறது. மேலும், அணையின் பாதுகாப்பு கருதி பரம்பிக்குளம் அணைக்கு பவர்ஹவுஸ் 412.73 கன அடியாக கேரளாவிற்கு மின் உற்பத்திற்கு பிறகு, மூன்று மதகுகளின் மூலம் 2242.12 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

அணையின் தற்போது உள்ள நீர்மட்டம் (160) 162.64 அடியாக உள்ளது. தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருவதினால், வால்பாறை வட்டாட்சியர், பொதுப்பணித்துறையினர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.