கோவையில் நாளை முதல் சுவையான உணவுகளின் கண்காட்சி தொடக்கம்

கோவை: தனிச்சுவைமிக்க உணவுகள் இடம்பெறும் 'கோர்மெட் பசார்' உணவுக் கண்காட்சி கோவையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.

கோவை: தனிச்சுவைமிக்க உணவுகள் இடம்பெறும் 'கோர்மெட் பசார்' உணவுக் கண்காட்சி கோவையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. 

உப்பிலி பாளையம் பெர்க்ஸ் பள்ளியின் அருகே உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் என்ற அரங்கில் 4-வது கோர்மெட் பசார்' உணவுக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில், அனுபவமிக்க வீட்டு சமையலர்கள், சமையற் கலைஞர்கள் மற்றம் கோவையைச் சேர்ந்த சிறந்த கஃபேக்களால் தயாரிக்கப்பட்ட கேக்குகள், இனிப்புகள், மாவு இனிப்பு பொருட்கள் மற்றும் சாக்லெட் போன்ற வகையிலான இனிப்புகள் இடம்பெறுகின்றன. 

இதில், கோவை, சென்னை, நாக்பூர், பெங்களூரூ, கேரளா, கொடைக்கானல், கோத்தகிரி மற்றும் உதகை போன்ற பகுதிகளில் இருந்தும் சேர்ந்து 65 அரங்குகளை அமைக்கின்றனர். கண்காட்சியில் ஆடை அலங்காரப் பொருட்களும் இடம் பெறுகின்றன. அதேபோல, முதல்முறையாக விவசாய சந்தையும் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பிரத்யேகப் புகைப்பட பகுதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

நாளை (ஆக.,09) மற்றும் நாளை மறுநாள் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியானது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் உண்டு. மேலும், தொடர்புக்கு பிரேமா கோயின்கா 9345787850 மற்றும் கனிகா கண்ணா 8220999933 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...