யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளுக்கு 48 மணிநேரத்திற்குள் சீல் : நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 11 விடுதிகளுக்குச் சீல் வைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 11 விடுதிகளுக்குச் சீல் வைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனால், யானைகள் மட்டுமின்றி வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் ஊடுருவி வருகின்றன. 



இதைக் கருத்தில் கொண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். சுமார் 2 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு 2011-ம் ஆண்டு மாற்றப்பட்டது.



சுமார் 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், கடந்த ஜுலை மாதம் 12-ம் தேதி உச்சநீதிமன்றம், யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளைக் கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த அறிக்கையை ஆகஸ்ட் 08-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 



இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், தற்போது யானைகள் வழித்தடத்தில் உள்ள 11 விடுதிகளுக்கு 48 மணிநேரத்திற்குள் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...