திருப்பூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு திருப்பூர் 51 வார்டில் இன்று தி.மு.க., தொண்டர்கள் மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க., தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தி.மு.க.,வினர் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர தி.மு.க.,வின் முன்னாள் மாநகர பொறுப்பாளர் மேங்கோ.பழனிசாமி தலைமையில் இன்று 51-வது வார்டு தி.மு.க., தொண்டர்கள் மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கருவம்பாளையம் பகுதிக் கழகத்தின் அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி, 51-வது வட்டக்கழக செயலாளர் ஆதவன் முருகேசன் உட்பட தி.மு.க., தொண்டர்கள் கலந்து கொண்டனர்.