திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுபானக் கடையில் குவிக்கப்பட்டிருந்த 710 மதுபான பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தாராபுரம் அருகே ரெட்டார வலசு செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செல்வம் என்பவர் பார் நடத்தி வருகிறார் இங்கு இரவு பகலாக மது விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் பாரை முற்றுகையிட்ட போது, அங்கு கள்ளத்தனமாக விற்பனை செய்ய மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பின்னர், இது தொடர்பாக அப்பகுதியினர் தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு ஆய்வாளர் ராஜகண்ணன் உத்தரவின் பேரில், விரைந்து வந்த போலீசார், அந்த மதுபானக் கடையின் பாரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 710 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், பாரில் பணியாற்றி வந்த நான்கு பேரை கைது செய்தனர். சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், பாரின் உரிமையாளர் செல்வத்தை தேடி வருகின்றனர்.