திருப்பூர்: திருப்பூரில் கிணற்றின் அருகே கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

கே.ஆர்.ஆர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க., பிரமுகர் வாசிமலை. இவருக்குச் சொந்தமான இடத்தில் சிறிய, சிறிய வீடுகளாகக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில், பெரும்பாலான அறைகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்கியிருக்கும் அறைகளை ஒட்டியவாறு ஒரு பகுதியில் கிணறு அமைந்துள்ளது. அந்தக் கிணற்றை சுற்றி 10க்கும் மேற்பட்ட அறைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், இன்று காலை திடீர் என்று அங்கிருந்த மூன்று வீடுகள் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தன. இதில், வீட்டில் இருந்த 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதையறிந்த, அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் சிலர், வாசிமலைக்குச் சொந்தமான இடத்தை முற்றுகையிட்டனர். அப்போது, வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் கட்டப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், இதுகுறித்து பலமுறை நகராட்சி ஆணையாளர் முதல் கோட்டாட்சியர் வரை பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் பொதுமக்கள், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.