கருணாநிதி மறைவு : இரண்டாவது நாளாக ஊட்டி உழவர் சந்தை மூடல்

நீலகிரி: முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டாவது நாளாக இன்றும் உதகை உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது.

நீலகிரி: முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டாவது நாளாக இன்றும் உதகை உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது.



கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியால் உதகையில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து நேற்று அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் உதகை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.



இந்நிலையில் விவசாயிகளும், பொது மக்களும் பயன் பெறும் வகையில் உழவர் சந்தையை உருவாக்கிய கருணாநிதிக்கு இன்று உதகை உழவர் சந்தையில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், இன்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகளை அடைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...