கனமழையால் மூன்றாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை : கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை மூன்றாவது நாளாக நிரம்பி வழிகிறது.


கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை மூன்றாவது நாளாக நிரம்பி வழிகிறது. 

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முதல் மீண்டும் அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.



இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி தற்போது நான்கு மதகுகள் வழியாக பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானியாற்றின் வேகம் தீடீரென அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் காரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இதில், பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கவும், யாரும் ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, துவைக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பெருக்கெடுத்து ஓடும் பவானியாறு பவானிசாகர் அணையைச் சென்றடைவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயரும் நிலை உருவாகியுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை தற்போதைய பருவமழை காரணமாக கடந்த இரு மாத காலத்தில் மட்டும் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...