சென்னை: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். போதுமான அளவு போலீசார் பணியில் இல்லாததால், கூட்ட நெரிசலை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி செண்பகம்(60) என்ற மூதாட்டி உட்பட இருவர் பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணன்(37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.