சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பெண் உட்பட இருவர் பலியாகினர்.
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பெண் உட்பட இருவர் பலியாகினர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். ஆனால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு போலீசார் பணியில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், நெரிசலில் சிக்கி செண்பகம் என்ற மூதாட்டி உட்பட இருவர் பலியாகினர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், மக்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசிய ஸ்டாலின், "கருணாநிதியின் நல்லடக்கம் செய்யப்படுவதைத் தொடர்ந்து, தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. கலவரத்துக்கு இடம் தர வேண்டாம்." என்றார்.