சென்னை: ராஜாஜி அரங்கில் இருந்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டு சிவானந்தா சாலை வழியாக தந்தை பெரியார் சிலையை கடந்து பேரறிஞர் அண்ணா சிலை வந்தடைந்து அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்.

நினைவிடத்தில் சந்தன மரத்தால் இழைக்கப்பட்ட பேழை வரவழைக்கப்பட்டுள்ளது. "ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்." என்ற வாசகம் அந்த பேழையில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல்
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கான வரைபடத்திற்கு உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அண்ணா நினைவிடத்தின் வலது புறத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் இடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனை அடுத்து மெரீனாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உள்ள இடத்தில் ஜெசிபி இயந்திரம் மூலம் இறுதி சடங்குக்கான பணி நடைபெறும் இடத்தை தி.மு.க மூத்த தலைவர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்