சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை 10:30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு 11.15 மணிக்கு வந்தார்.
தொடர்ந்து, கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் மற்றும் தமிழக பா.ஜ.க., பிரமுகர்கள் உடனிருந்தனர்.

கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், ஸ்டாலினுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

