கோவை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கோவையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
கோவை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கோவையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

பெரும்பாலான பேருந்துகள் இயங்காத காரணத்தால் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையங்களில் மக்கள் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தாலும், மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தாலும் கோவையின் பல்வேறு முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அரசு விடுமுறை அறிவித்துள்ள காரணத்தால் பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடைகள் உட்பட அனைத்து விதமான கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களை வாங்கமுடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.