சென்னை: கருணாதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை: கருணாதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மெரீனாவில் திமுக கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுப்பெற்று வந்த சூழலில், அங்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இதனைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நேற்று நள்ளிரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், காலை 6 மணிக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த சூழலில், தலைவர்கள் நினைவிடத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. இதன் மூலம் தமிழக அரசு கூறிவந்த சட்ட சிக்கல் நீங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில், இன்று காலை தாக்கல் செய்த பதில் மனுவிலும், கருணாநிதிக்கு இடம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது தமிழக அரசு. மேலும், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது. மனுவை ஹுலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பினால், திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக மக்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பினால், திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக மக்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.