கோவை: திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலே கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
கோவை: திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலே கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதனிடையே, இன்றும் கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசு போக்குவரத்து கழகம், கோவை சார்பில் இயக்கப்படும் 1,075 டவுன் மற்றும் மப்சல் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் 99 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளன.
நாளை காலை 6 மணிக்கு தான் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பேருந்துகள் இயங்காத காரணத்தால், அனைத்து பேருந்து நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.