கோவை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
கோவை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இது குறித்து கர்நாடக மாநில போக்குவரத்து துறையின், கோவை மேலாளர் ரவி கூறுகையில், "கோவை- பெங்களூருக்கு 12 பேருந்துகளும், கோவை- மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் இந்த சூழ்நிலை காரணமாக கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த 52 பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. நாளைய சூழ்நிலைகளை பொறுத்தே பேருந்துகள் இயக்கப்படும்." என தெரிவித்தார்.