மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறோம்; கிண்டியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியும் - தமிழக அரசு பதில் மனு

சென்னை: கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கோரிய வழக்கில் தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் கோரிய வழக்கில் தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மெரீனாவில் திமுக கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுப்பெற்று வரும் சூழலில், நேற்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மெரீனாவில் நினைவிடம் அமைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாலும், கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில் அனுமதியளிக்க முடியாது. மேலும், சர்தார் வல்லபாய் படேல் சாலையின் முகப்பில் உள்ள காந்தி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது. என்று குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நேற்று நள்ளிரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே அரசு செயல்படுவதாகவும், கிண்டியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையையே பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...