சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து காலை 5.30 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுவரப்பட்டது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து காலை 5.30 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சூழலில், இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும், ஸ்டாலினிடம் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், "கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்களுக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
தொடர்ந்து, மெரீனாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.