சென்னை: கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை என்று கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
சென்னை: கருணாநிதியின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை என்று கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் காரணத்தால் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு அவரால் தமிழகத்திற்கு வர இயலவில்லை.
இந்த சூழலில், விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கலைஞர் மறைவை என்னால் தாங்க முடியவில்லை.' என்று கூறும் அவர், உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு அழும் காட்சி பதிவாகியுள்ளது.