மெரினாவில் நினைவிடம் கோரிய வழக்கின் விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு

மெரினா கடற்கரையில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலை 8 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

சென்னை: மெரினா கடற்கரையில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலை 8 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர். 

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார். இந்நிலையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிடோர் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர். 

இந்த சந்திப்பின் போது, 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவேண்டும். மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும், என செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், சட்டம் அனுமதிக்கிறதா என அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்திருந்தார். இதனால், தி.மு.க.,வினர் எதிர்பார்த்ததைப் போலவே, மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மெரினாவில் நினைவிடம் அமைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதால், கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில் அனுமதியளிக்க முடியாது. மேலும், சர்தார் வல்லபாய் படேல் சாலையின் முகப்பில் உள்ள காந்தி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தி.மு.க., குடும்பத்தினர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தி மனு அளித்துள்ளார். இதற்கு அரசு செவி சாய்க்காததால், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஹுலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக நள்ளிரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, தி.மு.க., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி, 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளார். பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளைக் கொண்டு வந்த அவருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க என்ன சட்டசிக்கல் உள்ளது, எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்ற தமிழக அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், இந்த வழக்கில் பதில் அளிக்கக் கால அவகாசம் வேண்டும் என்ற வாதாடினார். இதற்கு தி.மு.க., வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதால், உடனடியாக பதிலளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஹுலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று காலை 8 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...