ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ்

மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்கள் சுட்டிக் காட்டப்பட்டன.

சென்னை: மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்கள் சுட்டிக் காட்டப்பட்டன. 

மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்களை சுட்டிக் காட்டப்பட்டது. 

இந்த நிலையில், மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு ஏதுவாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று வாபஸ் பெறப்பட்டது. 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் துரைசாமி கூறியதாவது:- ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டப் பகுதி கடலோர ஒழுங்குமுறை ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ளது. அதனால்தான், வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அண்ணா சமாதி இருக்கும் இடம் கடலோர ஒழுங்கு ஆணையக் கட்டுப்பாட்டில் கிடையாது. எனவே, கருணாநிதியின் உடலை அங்கு நல்லடக்கம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. 

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுமென்றே, சட்டசிக்கல்களை காரணம் காட்டியுள்ளார். எனவே, கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க ஏதுவாக, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக நான் தொடர்ந்த 4 வழக்குகள் மற்றும் பா.ம.க.,வைச் சேர்ந்த பாலுவின் ஒரு வழக்கும் தற்போது திரும்பப் பெற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டசிக்கல்கள் எழ வாய்ப்பே இல்லை. என்னுடைய வழக்கை விட கருணாநிதிதான் முக்கியம், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...