நீலகிரி: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நீலகிரி மாவட்ட படுகதேச பார்ட்டியின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதன் மாநில தலைவர் மஞ்சை. வி. மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முத்தமிழ் அறிஞருக்கு கண்ணீருடன் காணிக்கை ஆக்குகின்றோம். தமிழக அரசியலில் இன்னும் நூறாண்டுகள் டாக்டர்.கலைஞரின் பெயர் இருக்கும். இந்திய அரசியலில் சுயமரியாதையை இழக்காத தலைவராக வாழ்ந்தவர் என்பது மட்டுமில்லாமல், சுதந்திர இந்தியாவில், சுதந்திர நாளில் தேசிய கொடியை மாநில முதல்வர்கள் தான் ஏற்ற வேண்டும் என்பதை சாதனையாக்கிய வரலாற்று நாயகர்.
அத்தகைய நிகழ்வை நடத்தியதால் தான் முத்தமிழ் அறிஞரின் நினைவு உலகம் முழுவதும் உள்ள தமிழ்மக்களின் இதயத்தில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் வண்ணம் இயற்கை எய்திய மாதம் ஆகஸ்ட் என்பது சரித்திரம் ஆகும். நீலகிரி படுக சமுதாயத்தை சார்ந்த இளித்தொரை.கே. ராமச்சந்திரனின் தன்னுடைய அமைச்சரவையில் அமைச்சராக்கிப் படுக சமுதாயத்தினரை பெருமைப்படுத்தியவர். அதைப்போல் படுக சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக அரசு நிலம் வழங்கி இன்று கம்பீரமாக இளம் படுகர் சங்கம் கட்டிடம் அமையக் காரணமானவர்.
நீலகிரி மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எ. ராஜாவை மத்திய கேபினெட் அமைச்சராக்கி நீலகிரி மக்கள் என்றும் மறவாத நிலையை உருவாக்கிய செம்மொழி நாயகரின் இழப்பு இந்திய அரசியலுக்கே பேரிழப்பு ஆகும். அண்ணாரது மறைவு நீலகிரி மக்களுக்கு மட்டுமில்லாமல் படுக சமுதாயத்திற்கே பேரிழப்பு ஆகும். டாக்டர்.கலைஞரின் பேரிழப்பை தாங்கும் வல்லமையை அவர்தம் குடும்பத்தார்க்கும் கோடானுகோடி உடன்பிறப்புகளுக்கும் வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.