தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் நாளை (ஆக.,08) தேசிய துக்கநாள் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் நாளை (ஆக.,08) தேசிய துக்கநாள் அனுசரிக்கப்படுகிறது.

11 நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை 06.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரும் நாளை சென்னை வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மத்திய அரசு சார்பில் நாளை தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள அலுவலகங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் நாளை துக்க நாள் அனுசரிப்பதுடன், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.