சென்னை: மறைந்த கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் நாளை அதிகாலை 4 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாசக் கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 11 நாட்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார். இதனால், தொண்டர்கள் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க., தலைமையகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோபாலபுரத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் 1 மணி வரை கருணாநிதியின் உடலுக்குக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 3 மணி வரை சி.ஐ.டி., காலனியில் இறுதிச்சடங்கு செய்யப்பட இருக்கிறது. பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்கு வைக்கப்படும்.
மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள கட்சி அலுவலகங்களில் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.