கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள நிலையில் தற்போது அவர் குறித்த தேடல்கள் கூகுளில் அதிகரித்து வருகிறது.
கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போது அவர் குறித்த தேடல்கள் கூகுளில் அதிகரித்து வருகிறது.
கூகுள் டிரென்ட்ஸ் பொறுத்தவரையில் இந்திய அளவில் கருணாநிதியின் பெயர் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, கருணாநிதியின் உடல் நிலை குறித்து தேடிய நாடுகளின் வரிசையில் அரேபிய நாடுகள் இரண்டாம் இடத்தில் உள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஓமன், சிங்கப்பூர், கத்தார், ஸ்ரீலங்கா அமெரிக்கா போன்ற நாடுகளில் கருணாநிதி குறித்த தேடல்கள் அதிக அளவில் உள்ளன.
இந்தியா

இந்தியாவில், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் கருணாநிதி குறித்த தேடல்கள் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடகா, அந்தமான் நிகோபார் தீவுகள், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கருணாநிதி குறித்த தேடல்கள் அதிக அளவில் உள்ளன.
அதோடு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து இணையதளம் வழியாக பொதுமக்கள் அதிக அளவில் தேடி வருகின்றனர்.