முக்கியச் செய்தி: கலைஞர் கருணாநிதி காலமானார்: இந்தியாவின் மூத்த அரசியல் தூண் சரிந்தது!

சென்னை: இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காலமானார்.



சென்னை: இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.



தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது, உடல் நலனில் பிரச்சனை ஏற்படும் நேரங்களில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்புவார்.

கடந்த 2016-ம் ஆண்டு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக தொண்டையில் டிரக்கியாஸ்டமி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையின் போது 

நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட செயற்கை குழாயின் காரணமாக அவரது பேசும் திறன் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

அப்போது, முதல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பொருத்தப்பட்டிருந்த செயற்கை குழாயை மாற்றுவதற்காக அவர் மருத்துவமனைக்கு வந்து சென்றார். மேலும், பேசும் 

திறனை அதிகரிக்க வீட்டிலேயே பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த சூழலில், அவரது உடல் நலன் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த மாதம் 17-ம் 

தேதி தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு திடீர் விஜயம் செய்தார். இது தி.மு.க., தொண்டர்களை உற்சாகமடையச் செய்தது. இந்த நிலையில், 

கடந்த 18-ம் தேதி அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் 

பிறகு அன்று இரவே அவர் வீடு திரும்பினார்.

வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வந்த அவருக்கு ஜூலை 26-ம் தேதி மாலை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக கோபாலபுரம் வீட்டிலேயே 

வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கொண்டு மருத்துவ குழு ஒன்று அவரை கண்காணித்து வந்தது. அவருக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும், 

சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம்  அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, மறுநாள் காலை முதலே துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் 

தலைவர்களும், அமைச்சர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் அவரை நேரில் பார்த்துச் சென்றனர். இந்த நிலையில், 28-ம் தேதி அதிகாலையில் கருணாநிதியின் உடல்நிலை 

மோசமானதால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை 

அளிக்கப்பட்டது. இதனிடையே,  "யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம், கலைஞர் நலமுடன் உள்ளார் என்று" ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து ஆறுதல் 

செய்திகள் வரவே, துவண்டு கிடந்த கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும் சற்றே உற்சாகமடைந்தனர். 

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா 

நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். இதனிடையே, இந்த 10 நாட்களாக நாள்தோறும், கருணாநிதியின் உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் 

சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், மஞ்சள் காமாலையின் தொற்று கல்லீரலைத் தாக்கியதால், நேற்று (ஆக.,06) கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாகத் 

தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், ஆ. ராசா, கருணாநிதியின் உதவியாளர் 

சண்முகநாதன், மு.க., அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சென்று பார்த்தனர். 

இதனிடையே, காவேரி மருத்துவமனை நிர்வாகம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில்,  தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 

உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் வயது மூப்புக் காரணமாக, அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

அடுத்த 24 மணிநேரத்திற்கு கருணாநிதியின் உடல்சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும், எனக் கூறப்பட்டது. 

மருத்துவமனையில் இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மருத்துவமனையின் வளாகத்தின் முன்பு மீண்டும் தி.மு.க., தொண்டர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. 

கவலைக்கிடமான நிலையில், 11-வது நாளாக கருணாநிதி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.   உடலின் சில உறுப்புகளைச் செயல்பட 

வைப்பதில் ஏற்பட்ட சிக்கலால், கருணாநிதி இன்று (ஆக.. 07) காலமானார். இதைக் கேட்ட தி.மு.க., தொண்டர்கள் இதயக் கனத்துடன் கண்ணீர்விட்டு அழுது வருகின்றனர். 

கருணாநிதியின் மறைவிற்கு அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பொது வாழ்க்கையில் 80 ஆண்டுகள், கலைத்துறையில் 70 ஆண்டுகள், தி.மு.க., தலைவராக 50 ஆண்டுகள் என்று இவரது நீண்ட நெடும் பயணம் நீள்கிறது. எழுத்தாளர், 

இயக்குநர், பத்திரிக்கையாளர், மூத்த அரசியல் தலைவர் என்று பல பரிமாணங்கள் எடுத்த கருணாநிதிக்கு வயது 94.

"தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத் தான் மிதப்பேன், அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம், கவிழ்ந்துவிட மாட்டேன்." என்ற 

மூத்த அரசியல் தூண் இன்று சரிந்தது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும், அவரது கோடான கோடி தொண்டர்களுக்கும், ஆழ்ந்த 

இரங்கல்களைத் தெரிவிக்கிறது சிம்ப்ளிசிட்டி.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...