கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், மத்திய பாதுகாப்பு படையை அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களைக் கட்டுப்படுத்த போலீசாரும், தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறையான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதால், தேசிய தலைவர்கள் பலர் தமிழகத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்குரிய ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக தமிழக தலைமை செயலர், மத்திய உள்துறை செயலருடன் தொலைப்பேசியில் பேசினார். எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக உள்துறை செயலருக்கு பேக்ஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், மத்திய பாதுகாப்பு படையை அனுப்புவதாக உள்துறை செயலர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.