கலைஞர் உடல்நிலை செய்தி எதிரோலி : கோவையில் இருந்து இன்று இயக்கப்படவிருந்த ஆம்னி பேருந்துகள் ரத்து

கோவை: கோவையில் இருந்து பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இன்று இயக்கப்படவிருந்த 350 ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இன்று இயக்கப்படவிருந்த 350 ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுவாசக் கோளாறு மற்றும் வயது தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால், தொண்டர்கள் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் தி.மு.க., தொண்டர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறை தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருப்பதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் இன்று மாலை நேரம் முதல் கடைகள் மற்றும் வர்த்த நிறுவனங்கள் ஆகியவை அடைக்கப்பட்டு வருகின்றன. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மாலை நேரக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 



இதனிடை.யே, கருணாநிதி உடல்நிலை செய்தி எதிரோலி காரணமாக கோவையில் ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு இயக்கப்படாது என கோவை மாவட்ட ஆம்னி பேருந்து முதலாளிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீபன் தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "நாளைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவு பேருந்துகள் நாளை இயக்கப்படுமா என முடிவு செய்யப்படும். இன்றைக்கு கோவையிலிருந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் 350 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது. இதனால், ஒன்றரை கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். பயணிகள் தங்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தேவைப்பட்டால் நாளைய தேதிக்கும் பயணச்சீட்டு மாற்றித் தரப்படும்," என்றார்.

இதேபோல, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...