தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை இன்று மாலை 6 மணியுடன் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு அதன் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை இன்று மாலை 6 மணியுடன் மூடுவதற்கு தயாராக இருக்குமாறு அதன் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 24 மணிநேர சிகிச்சைக்கு கருணாநிதியின் உடல் ஒத்துழைப்பதைப் பொறுத்தே ஏதுவாக இருந்தாலும் கூற முடியும் என மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். தற்போது, அவரது உடல்நிலை மிகவும் அபாயக் கட்டாயத்தை எட்டியுள்ளது. இதனால், எந்தநேரத்திலும், உடல்நிலை குறித்த எதிர்மறையான அறிவிப்பு வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பியவாறு காத்திருக்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க., தொண்டர்கள் ஆங்காங்கு குவிந்து வருகின்றனர். எனவே, மாநிலம் முழுவதும் போலீசார் முழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே, அதாவது இன்று மாலை 6 மணிக்கே மூட தயாராக இருக்குமாறு அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.