'வா எழுந்து வா' தமிழ் ஞானப் பழமே எழுந்து வா : கோவையில் மாம்பழத்தில் வாசகத்தைப் பொரித்த கருணாநிதியின் ரசிகர்

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் 'வா எழுந்து வா தமிழ் ஞானப் பழமே எழுந்து வா' வாசகத்தை மாம்பழத்தில் பொரித்து இளைஞரின் உருக்கச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த இளைஞர் 'வா எழுந்து வா தமிழ் ஞானப் பழமே எழுந்து வா' வாசகத்தை மாம்பழத்தில் பொரித்து இளைஞரின் உருக்கச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கோவை தங்கநகை தொழிலாளியான 'உன்னால் முடியும் ராஜா' மைக்ரோ அளவில் தங்கத்தில் கிரிக்கெட் பேட் மற்றும் உலக கோப்பை, தலைவர்களின் சிறிய சிற்பங்களாக செய்வது, சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் கருணாநிதியின் வைரவிழா நிகழ்வு கடந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. கருணாநிதியின் தமிழ் தன்னை பிரமிக்க வைப்பதால் அவரது உருவத்தை பென்சிலில் நாற்காலியின் மேல் கருணாநிதி அமர்ந்து கைகாட்டிக் கொண்டிருப்பது போன்றும், அவரது தலைமேல் பேனாமுனை வைத்து, அதில் 94 வயது என்று குறிப்பிட்டு அவரது கலையுணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் சிறிய சிற்பங்களை கடந்த வருடம் உருவாக்கியிருந்தார். 

தற்போது, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலக்கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற்றுத் திரும்பி வர வேண்டும் என்பதை வலியுறுத்தி 'வா எழுந்து வா' தமிழ் ஞானப் பழமே எழுந்து வா என்ற வாசகத்தை பழுத்த மாம்பழத்தில் ஓவியமாக வரைந்துள்ளார். ஆயில் பெயிண்ட் மட்டும் வாட்டர் கலர் மூலம் மூத்த அரசியல்வாதிக்கு ஒரு சிறிய கலைஞனாக இதனை தான் வரைந்ததாகவும், கலைஞர் கருணாநிதிதான் தன் இரு பெண்களுக்கும் காவிய தமிழ் மற்றும் அபிநய தமிழ் என பெயர் சூட்டியதாகவும் யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...