சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்றைக் காட்டிலும் மோசமான நிலையில் உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்றைக் காட்டிலும் மோசமான நிலையில் உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வயோதிகம் மற்றும் சுவாசக் கோளாறு, காரணமாக தி.மு.க., தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு கடந்த மாதம் 28-ம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு தொடர்ந்து 11-வது நாளாக வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அவரது உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.