திருப்பூர்: திருப்பூர் வெங்கமேடு பகுதியில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலையில் மின் வாரியத்துறை சார்பில் தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், மினி லாரி நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த டிரான்ஸ்பாரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்சாரம் தாக்கி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

போயம்பாளையத்தை அடுத்த வெங்கமேடு முதல் கங்காநகர் பகுதி வரை சாலையின் நடுவே மின்சார கேபிள் அமைப்பதற்கு சாலை நெடுகிலும் குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேலாகியும் தோண்டப்பட்ட குழி மூடப்படாததால் சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக இருந்தது.
சாலையில் மின்சார கேபிள் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழி உடனடியாக மூட வேண்டும் என்றுஅப்பகுதி மக்கள் மின்வாரியத் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சூழலில், அப்பகுதியில் மினி லாரி ஒன்று அந்த குழியில் நிலைதடுமாறி அருகில் இருந்த மின்மாற்றியில் மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாரத் கட்டாரி என்ற ஓட்டுனர் பரிதாபமாக பலியானார்.

மேலும், மினி லாரிக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவக்குமார் என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.