கோவை: ஸ்மார்ட் திட்டப்பணிகள், சீரான குடிநீர் விநியோகம் ஆகியவை குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி துணை ஆணையாளர் ப. காந்திமதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் கணேசன், மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.