நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் : திருப்பூரைச் சேர்ந்தவர்கள் 19 பேர்

திருப்பூர்: நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் 10 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் திருப்பூரை சேர்ந்தவர்கள்.

திருப்பூர்: நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் 10 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் திருப்பூரை சேர்ந்தவர்கள்.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் செயல்பட்டு வரும் ஆன்மிக அமைப்பு ஞானாலயா வள்ளலார் கோட்டம். இதன் தலைவர் ஶ்ரீ ஞானாலயா சுவாமிகள் தலைமையில் பத்து பெண்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி கைலாஷ் மானசரோவர் தரிசனத்திற்காக புறப்பட்டு சென்றனர்.

தரிசனம் முடித்து விட்டுத் திரும்பும் போது நேபாள மாநிலம் சிம்காட் என்னுமிடத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக திரும்பி வர இயலாமல் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர்.



தற்பொழுது உணவிற்காக சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு தாங்கள் தமிழகம் திரும்பி வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கைலாஷ் யாத்திரை சென்ற வசந்தி என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, "மோசமான வானிலை காரணமாக விமானம் வர முடியாத காரணத்தினால் கடந்த 2 நாட்களாக தமிழகம் வர முடியாமல் சிம்காட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தவித்து வருகிறோம். 

மேலும், யாத்திரை வந்தவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்பதால் உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறைவாகவே உள்ளது. எனவே, இங்கு தவித்து வரும் எங்களை தமிழக அரசு உடனடியாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...