கோவை: தேசிய கைத்தறி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கைத்தறிப் பொருட்களின் பயன்பாட்டின் முக்கியத்துவமும், நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு கைத்தறி துறையின் பங்களிப்பை வலியுறுத்தியும், தேசியக் கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.
கோவை: தேசிய கைத்தறி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கைத்தறிப் பொருட்களின் பயன்பாட்டின் முக்கியத்துவமும், நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு கைத்தறி துறையின் பங்களிப்பை வலியுறுத்தியும், தேசியக் கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக கைத்தறி துறையே ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முக்கிய துறையாக விளங்குகிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கும் கைத்தறிப் பொருட்களே உகந்தது.

இந்த சூழலில், கைத்தறி பொருட்களின் பயன்பாட்டை இளைய தலைமுறைக்கும், மக்களுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் கோவை மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார்.
பின்னர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கைத்தறி வகைகளை பார்வையிட்டர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஸ்நேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி தனி நபருக்கான கடன் ரூ.50 ஆயிரம் வீதம் 16 பேருக்கு வழங்கப்பட்டது. இக்
கண்காட்சியில் கோவை காட்டன், நெகமம் காட்டன், கோரா, பட்டு, பெட்ஷீட், துண்டு சுடிதார் வகைகள் ஆர்கானிக் காட்டன் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறைந்த பட்சம் ரூ.1000 முதல் ரூ. 6000 வரையிலான சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தேசிய அளவில் விருது பெற்ற அகிம்சா பட்டு, மரத்தில் இந்திய தலைவர்கள் உருவம் பொருத்த சேலை மற்றும் தஞ்சாவூர் அருகே கோடாலி கருப்பூர் என்ற கோவிலின் கோபுர டிசைன் மூலம் உருவக்கபட்டு 1988-ல் ஜனாதிபதி விருது பெற்ற சேலை என பல்வேறு வகையான கைத்தறி சேலைகள் இடம் பெற்று இருந்தன.
இக்கண்காட்சி குறித்து வெள்ளலூர் நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் கூறுகையில், "இந்த ஆண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளவை புதிய ரகங்கள். 35 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்." என்றார்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் கூறுகையில், "கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 90 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ஒரு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையை எதிர்பார்க்கிறோம். மேலும், புதிய வடிவமைப்புகள் விற்பனை பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுமுகையில் தேவாங்கர் திருமண மண்டபத்திலும் இக்கண்காட்சி நடைபெறுகிறது." என்றார்.
பின்னர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி தனி நபருக்கான கடன் ரூ.50 ஆயிரம் வீதம் 16 பேருக்கு வழங்கப்பட்டது. இன்று மாலை வரை நடைபெறும் இக்கண்காட்சியில் கோவை காட்டன், நெகமம் காட்டன், கோரா, பட்டு, பெட்ஷீட், துண்டு சுடிதார் வகைகள் ஆர்கானிக் காட்டன் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறைந்த பட்சம் ரூ.1000 முதல் ரூ. 6000 வரையிலான சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.