கோவை: வடமதுரை பகுதியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இருவர் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
கோவை: வடமதுரை பகுதியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இருவர் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
துடியலூரை அடுத்த வடமதுரை பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய கிளை செயல்பட்டு வருகிறது. புதிய மின் இணைப்புக்காக சிவக்குமார் என்பவர் அந்த அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த சூழலில், அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், சிவக்குமாரிடம் மின் இணைப்புக்காக ரூ.40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளனர். தொடர்ந்து, லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்ட சிவக்குமார் இது தொடர்பாக, லஞ்சம் ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சிவக்குமாரிடம் கொடுத்தனர். அந்த பணத்தை, மின்வாரிய நிர்வாக உதவி செயற்பொறியாளர் அய்யாவு மற்றும் மின்சார துறை செயற்பொறியாளர் நந்தகோபால் ஆகியோரிடம் சிவக்குமார் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர். பின்னர் லஞ்சம் வாங்கிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.