கோவை: கோவில்களில் கொண்டாடப்படும் மத வழிபாடுகளால் உருவாகும் குப்பைகள், கழிவுகளால் கோவையில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கடந்த 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவையில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. குறிப்பாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து, பிண்டங்கள், பூ, மாலை போன்றவற்றை அங்குள்ள நொய்யல் ஆற்றில் விட்டனர். இதனால், ஆறு முழுவதும் குப்பை மற்றும் கழிவுகளால் நிறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரு தினங்களாக நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 2.5 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டது. 'இதுபோன்ற பண்டிகை மற்றும் திருவிழா நேரங்களில் நடத்தப்படும் மத வழிபாடுகளால் ஆறுகளில் போடப்படும் குப்பைகள் மற்றும் மக்கும் கழிவுகளால் நீர்நிலைகள் தொடர்ந்து மாசடைவதாக குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

"குளங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் போன்ற கழிவுகளால், கால்வாய்களில் தண்ணீர் சுலபமாக பாய்ந்து செல்வது தடைப்படுகிறது. இதனையறியாமல், பொதுமக்கள் தொடர்ந்து நீர்நிலைகளில் குப்பைகள், கழிவுகளை எறிந்து வருகின்றனர். திருவிழா காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குளங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," இவ்வாறு சமூக ஆர்வலர் கூறினார்.

அதேவேளை, பொங்கல் பண்டிகை காலத்திலும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை பொதுமக்கள் குளங்களை எறிந்து செல்கின்றனர். வரும் காலங்களில் இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.