முதுமலையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது : ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சுற்று வட்டார பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக மசினக்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் (50) என்பவரை பிடித்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனை செய்வதும். ஒரு கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.



அதை பறிமுதல் செய்த போலீசார் ரங்கராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...