நீலகிரி: முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி சாலை ஓரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை சுற்றுவட்டார பகுதிகளான தெப்பக்காடு, மசினகுடி, சீகுர் மற்றும் பொக்காபுரம் போன்ற இடங்களில் வறண்டு காணப்பட்ட வன பகுதிகள் தற்போது பசுமைக்கு திரும்பி உள்ளது.
இதனால் சாலை ஓரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. யானை மற்றும் காட்டு மாடுகள் சாலை ஓரங்களில் மேய்ந்து வருகிறது. இதனால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், அப்படி சாலை ஓரங்களில் இருக்கும் வன விலங்குகள் அருகில் சென்று செல்பி எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வனத்துறையினரின் அறிவிப்பை இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மதிக்காமல் வன விலங்குகள் அருகே சென்று ஆபத்தை உணராமல் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

இதைத் தடுக்கும் வண்ணம் வனத் துறையினர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.