எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதாவை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதா சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதா சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மத்திய அரசு கடந்த மாதம் 23-ம் தேதி எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஏற்கனவே ஜி.எஸ்.டி., வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசு முன் வைத்துள்ள இந்த சட்டத்திருத்தமானது சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்குமென்று

சிறு குறு தொழிலாளர் தரப்பில் எதிர்ப்புகள் வந்துள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக கோவையில் உள்ள சிறு குறு தொழில் அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

அந்த மனுவில், மசோதாவானது, சிறு தொழிலாக பதிவு பெறுவதற்கான உச்சவரம்பை 225 கோடி ரூபாய் வரை இடமளிக்கிறது, இந்த ஷரத்தை நீக்க வேண்டும் எனவும் உச்சவரம்பை அதிகரிக்கும் பட்சத்தில் அது கார்பரேட் நிறுவனங்களுடன் சிறு குறு நிறுவனங்கள் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது ஒருவருக்கும் 75 கோடி ரூபாய் உச்சவரம்பே போதுமானது. எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிறு மற்றும் குறு நிறுவனம் என்று வகைப்படுத்துவதை விற்று முதல் ( turnover) மாறுகின்ற அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வணிகர்கள் தங்களை சிறு, குறு நிறுவனமாக பதிவு செய்துகொள்ள தடை செய்வதற்கு ஏதுவான தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும். கோரிக்கைகளை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். என்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...