கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க., தி.மு.க.,பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென பொதுமக்கள் பலரும் விருப்பப்படுகின்றனர். இதனால், கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து மது வாங்குவதும், பல கிலோ மீட்டர் மதுக்கடை தேடி செல்வதும் தவிர்க்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக்கடைக்கு எதிராக கருமத்தம்பட்டி பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் மதுக்கடையை திறக்கக் கோரி மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.