கோவை: ஹீலர் பாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: ஹீலர் பாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான இயற்கை வழி பிரசவத்தை இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் விரும்புவதற்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதே காரணம்.
தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் இலவசமாக பார்க்க வேண்டும். பிரசவத்திற்கு பணத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்கும் தனியார் மருத்துவமனைகளைக் கண்டறிந்து கண்காணிப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செவிலியர் பயிற்சி அமைப்புகளை உருவாக்குவது போல இயற்கை வைத்தியம் பார்க்க செவிலியர்களை உருவாக்க வேண்டும். ஹீலர் பாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.