கோவை: சுந்தராபுரம் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதைத் தடுக்க கோரி, நேற்று அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை: சுந்தராபுரம் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதைத் தடுக்க கோரி, நேற்று அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 1-ம் தேதி அதிவேகமாக வந்த சொகுசு நிலை தடுமாறி சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஒட்டுநர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த சுபாஷினி, நாராயணன், ரங்கதாஸ், அம்சவேணி, குப்பாத்தாள், ரூக்குமணி ஆகிய 6 பேருக்கும் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த சூழலில், அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், அதனைத் தடுக்கவும், வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி பொதுமக்கள் தீடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.