உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியாகிறது : தேர்தல் அட்டவணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது தமிழக தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதால், தேர்தல் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதால், தேர்தல் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதற்கான தேர்தல், 2016 அக்டோபரில் நடக்க இருந்தது. பழங்குடியினர் இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க., தொடர்ந்த வழக்கால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், தேர்தல் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளை காரணம் காட்டி, தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, உள்ளாட்சி பணிகளுக்கான 3,000 கோடி ரூபாயை, மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது.

தற்போது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, புதிய வார்டுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாநில வார்டு வரையறை ஆணையம், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, புதிய வார்டுகள் பட்டியலை தயாரிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுக்கு, ஆணையம் கெடுவிதித்து இருந்தது. இருப்பினும், புதிய வார்டுகள் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் முழுமையாக ஒப்படைக்கவில்லை. இப்பணிகள் முடிந்தபின், இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை பிரிக்கும் பணி நடைபெறும். வார்டு வரையறை ஆணையமே, இப்பணியை மேற்கொள்ளும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், 2017 நவம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையத்தின் மீது தி.மு.க.,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கடந்த ஜூலை 31ல் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை ஏதும் உள்ளதா; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தடையாகாது. 'தேர்தல் அட்டவணையை, ஆக., 6ல், தாக்கல் செய்ய வேண்டும். மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள வேண்டும்' என, உத்தரவிட்டனர். நீதிபதிகளின் கெடுபிடி உத்தரவால், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி, உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தயார் செய்தனர்.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை, நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே, உள்ளட்சி தேர்தல் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், வார்டு வரையறை பட்டியல், இட ஒதுக்கீடு பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளை காரணம் காட்டி, அடுத்த ஆண்டு ஜனவரிக்கு பின், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இல்லையெனில், அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் நடத்தும் வகையில், அட்டவணை தயார் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...